திருப்பதி கோவிலுக்குள் காலணியோடு ஃபோட்டோஷூட்: மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தார மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் திருமணம் நடந்து. இதனை அடுத்து இருவரும் நேற்று மதியம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர்.

அப்போது நடிகை நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காலணியுடன் கோவிலின் நான்கு மாட வீதியில் சென்றதாக சர்ச்சை எழுந்தது.

திருமலையில் போட்டோ ஷூட் செய்வதோ, நான்கு மாட வீதியில் காலணிகள் அணிவதோ கூடாது என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதியாகும்.

இத்தகைய சூழலில் இந்த விவகாரம் குறித்து தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதை அடுத்து காலணி அணிந்து சென்றதற்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: