மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி - இன்றைய நிலை என்ன?

கன்னியாகுமரியில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுகிழமை அதிகாலை வரை மழை தணிந்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளது. எனினும் சுசீந்திரத்தை அடுத்த நக்கை நகர், கற்காடு, தோவாளை, பரசேரி, தாழாக்குடி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாமால் உள்ளது.

பிரதான அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

அங்குள்ள இன்றைய கள நிலவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.