|
அணுசக்தி ஒப்பந்தமும் அரசியல் நெருக்கடியும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்தியா அமெரிக்கா இடையில் திட்டமிடப்படுவரும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் இந்திய கூட்டணி அரசு எதிர்கொண்டுவரும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பான செய்திகள். 23/07/2008 இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, 22 அன்று நடந்த நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருப்பது தொடர்பான அரசியல் நிகழ்வாக, இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தவிர, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீயஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருப்பது இந்திய அரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து இந்திய அரசியல் பகுப்பாய்வாளர் மஹேஷ் ரங்கராஜன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி 22/07/2008 இந்தியாவின் ஆளும் மத்திய கூட்டணி அரசுக்கு இடது சாரிகள் அளித்து வந்த ஆதரவு, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த சர்ச்சையின் பின்னணியில் விலக்கிக்கொள்ளப்பட்ட சூழலில், அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அரசு வெற்றிபெற்றுள்ளது. மத்திய கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது குறித்து காங்கிரஸ் கட்சியின் கருத்தை மத்திய அமைச்சர் மணிஷங்கர் ஐயர் வழங்கினார். இடதுசாரிக் கட்சிகளின் கருத்தை தெரிவித்தார் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் உ.ரா.வரதராசன். பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் கருத்தை வழங்கினார் அக்கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன். 20/07/2008 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆந்திராவின் முஸ்லிம் மஜ்லீஸ் கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதேநேரம் அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராய் வாக்களிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பு 19/07/2008 மத்திய அரசுக்கு ஆதரவு அளித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அக்கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியில் தான் இணைவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்த மேலதிக விபரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பு அணுசக்தி உடன்பாடு பிரச்சனையால் மத்திய அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவை விலக்கி கொண்டுள்ள நிலையில், மத்திய அரசு ஜுலை 22 ம் தேதி தனது பெரும்பான்மையை நிரூபிக்க கடும் பிரயத்தனங்கள் மேற்கொண்டு வருவது தொடர்பான செய்திகள். சர்வதேச அணுசக்தி அமைப்புடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தால் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு பாதிப்பு வராது என்கிறார் இந்திய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் 10/07/2008 இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாட்டில், சர்வதேச அணுசக்தி அமைப்புடன் செய்துகொள்ளப்படும் பிரத்யேக பாதுகாப்பு ஒப்பந்தத்தின் வரைவு வடிவத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் செய்துகொள்ளப்படும் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. இதன் அடிப்படையில்தான், அமெரிக்காவுடனான உடன்பாட்டின் அடுத்தகட்டத்தை எட்டமுடியும். இந்த ஒப்பந்தத்தின் சாராம்சங்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து, இந்திய அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கார் அவர்கள் தெரிவித்த கருத்துகளுடன் எமது புதுதில்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கிய செய்திக் குறிப்பு. 09/07/2008 அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து, இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய நடுவணரசுக்கான தமது ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டதை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யும் கடிதத்தை இடது சாரிகள் இந்திய குடியரசு தலைவரிடம் கையளித்திருக்கிறார்கள். இது குறித்து புதுதில்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கும் செய்திக் குறிப்பு. 08/07/2008 இந்தியா அமெரிக்க இடையேயான அணுத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டது பற்றிய செய்திக் குறிப்பு. இடதுசாரிகள் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில் அது இந்திய அரசியலில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என புதுடில்லியிலுள்ள அரசியல் ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டேன். இடதுசாரிகள் இந்தியாவின் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து சென்னையிலிருந்து எமது செய்தியாளர் கோபாலன் வழங்கிய செய்திக் குறிப்பு. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||