|
அருந்ததியருக்கு உள்-ஒதுக்கீடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு செய்வது குறித்து தமிழக அரசுக்கு ஆலோசனை தெரிவிப்பதற்காக நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்திருக்கிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுவரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் ஆதிதிராவிட சமூகங்களில் ஒன்றான அருந்ததியர் சமூகத்தினர் தங்களுக்கு உள்-ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிவரும் நிலையில், இந்த உள்-ஒதுக்கீடு வழங்க முடிவுசெய்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. இது பற்றி ஆலோசனை செய்வதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீட்டுக்கான ஏற்பாட்டைச் செய்வது என்று இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கென ஒரு நபர் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு அது தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் இவ்விவகாரம் முன்னெடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அருந்ததியருக்கு தனி உள்-ஒதுக்கீடு வழங்குவதில் நியாயம் இல்லை என்று கூறி இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்திருந்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. அவரது கருத்துகளை நேயர்கள் இங்கே கேட்கலாம். இதற்கு ஆதிதமிழர் பேரவை என்கிற அருந்ததியர்களுக்கான அமைப்பின் நிறுவனத் தலைவர் இரா.அதியமான் தெரிவிக்கும் பதில்களை நேயர்கள் இங்கே கேட்கலாம். அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிப்பதாக, அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த உள் ஒதுக்கீட்டை அமுல்நடத்துவதற்கு முன்பு, தமிழக அரசு தமிழ்நாட்டில் வாழும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் அனைத்து ஜாதியினர் குறித்த முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இது குறித்து தமிழோசையிடம் அவர் தெரிவித்த கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம். | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||