|
எதிர்காலம் கேள்விக்குறி - வீரப்பன் மனைவி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எனக்கும் என் குழந்தைகளுக்கும் என்ன எதிர்காலம்? வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேட்டி வீரப்பனின் மரணத்திற்குப் பிறகு நாங்கள் நிர்கதியாய் நிற்கிறோம், நானும் என்னுடைய இரண்டு சிறு பெண்களும் எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறோம் என்று தெரியவில்லை என வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் கூறினார். சென்ற அக்டோபர் 18-ஆம் தேதி இரவு, தமிழகம் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே, சந்தனக் கடத்தல் வீரப்பனும், மூன்று கூட்டாளிகளும் தமிழக விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதை அடுத்து, வீரப்பனின் உடல் கடந்த புதன்கிழமை மேட்டூர் அருகே மூலக்கடையில் அடக்கம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, மேட்டூரில் இருந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை, தமிழோசை தென்னக நிருபர் எஸ் சம்பத் குமார் பேட்டி கண்டார். அதில் முத்துலட்சுமி, 1990-ஆம் ஆண்டு வீரப்பனுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்வதாகவும் கூறினார். கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, தான், வீரப்பனைச் சந்த்தித்ததாகவும், முத்துலட்சுமி கூறினார். தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, தன்னுடைய குடும்பத்தாருடன் இயல்பான வாழ்க்கையை வாழ வீரப்பன் விரும்பியதாகவும் அது தொடர்பாக ஜெயலலிதா 2001 ம் ஆண்டு மீண்டும் தமிழக முதல்வராக போறுப்பேற்றதற்கு முன்னதாக வீடியோ கேசட் ஒன்றை அனுப்பிதாகவும், ஆனால் முதல்வரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் முத்துலட்சுமி கூறினார். தவிர, 1992-ஆம் அண்டு, தன்னை, தமிழக விசேட அதிரடிப்படை, கைது செய்து சித்திரவதை செய்தது, விடுதலையான பிறகு இன்று வரை தன்னைக் கண்காணித்து வருகிறது, இதனால் தன்னால் இயல்பு வாழ்க்கை நடத்துவது முடியாமல் போய்விட்டது என்று கூறினார் முத்துலட்சுமி. |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||