பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் காட்சிகள் - காணொளி

பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் காட்சிகள் - காணொளி

"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா அறிவித்துள்ளது.

"பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகளைக் குறிவைத்து தாக்கப்பட்டன" என இந்தியா கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்படக் குறைந்தது ஏழுபேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு