You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எனது தாயும் தந்தையும் எங்கே? - இஸ்ரேல் தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகள் - காணொளி
காஸாவைச் சேர்ந்த பல குழந்தைகளின் நிலைமையின் பயங்கரத்தின் ஒரு உதாரணம்தான் இந்த காணொளி. அவர்களின் வாழ்க்கை ஒரு நொடியில் மாறுகிறது. அவர்களின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் மற்றும் தாத்தா பாட்டி கொல்லப்பட்டனர். இதனால் அவர்களது வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று 240 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்து இஸ்ரேல் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர் போர் தொடங்கியது. காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சிகத்தின் படி, இந்த மோதலில் 6,000 குழந்தைகள் உட்பட 14,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
யுனிசெஃப்பின் தகவல் தொடர்பு மேலாளரான ரிக்கார்டோ பைர்ஸின் கூற்றுப்படி, காசா பகுதியில் உள்ள தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் துல்லியமான எண்ணிக்கையை நிர்ணயிப்பது தற்போது "பகையின் தீவிரம் மற்றும் தரையில் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலை" ஆகியவற்றின் அடிப்படையில் சவாலாக உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)