அமெரிக்க ஏவுகணை மூலம் யுக்ரேன் இனி ரஷ்யாவுக்குள் தாக்கலாம் - பைடன் முடிவால் போரின் போக்கு மாறுமா?

அமெரிக்க ஏவுகணை மூலம் யுக்ரேன் இனி ரஷ்யாவுக்குள் தாக்கலாம் - பைடன் முடிவால் போரின் போக்கு மாறுமா?

கிட்டதட்ட 300கிமீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ‘Army Tactical Missile Systems’ (ATACMS) நீண்ட தூர ஏவுகணையை பயன்படுத்த யுக்ரேனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கியிருக்கிறார்.

பல மாதங்களாக அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்த அனுமதிக்குமாறு ஜெலென்ஸ்கி கேட்டு கொண்டிருந்தார்.

மறுபுறம் அவ்வாறு அனுமதி வழங்குவது நேட்டோ கூட்டணி இந்த போரில் நேரடியாக ஈடுபடுவதற்கு சமம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் பைடன் அதைமீறி இப்போது அனுமதி வழங்கியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

யுக்ரேன் போரில் வட கொரியா ராணுவத்தை ஈடுபடுத்த ரஷ்ய அதிபர் புதின் எடுத்திருக்கும் முடிவுதான் ஜோ பைடனின் இந்த முடிவுக்கு காரணம் என பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.

குர்ஸ்க் பகுதியில் சுமார் 11 ஆயிரம் வட கொரிய ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருக்கலாம் என யுக்ரேன் மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பைடனின் முடிவால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm shadow) ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அனுமதி அளிக்கக்கூடும்.

ஆனால் பைடனின் முடிவு குறித்து இருநாடுகளும் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)