காணொளி: ஜென் Z மத்தியில் வைரலாகும் ‘வாபி–ஷாபி’ தத்துவம் பற்றி தெரியுமா?

காணொளி: ஜென் Z மத்தியில் வைரலாகும் ‘வாபி–ஷாபி’ தத்துவம் பற்றி தெரியுமா?

‘வாபி–ஷாபி’- இப்போது ஜென் Z மத்தியிலே வேகமாக பரவும் ஒரு புதிய ட்ரெண்ட். ‘வாபி–ஷாபி’ என்றால் என்ன? என்ற கேள்வி தோன்றலாம். இது ஜப்பானிய சொல்லாகும். ஜென் Z-க்கு இது புதிய ட்ரெண்டாக இருந்தாலும், உண்மையில் 15ஆம் நூற்றாண்டிலேயே ஜப்பானில் உருவான ஒரு தத்துவக் கருத்துதான் இது.

இந்த ஜப்பானிய தத்துவம் ‘வாபி’ மற்றும் ‘ஷாபி’ என்ற ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு கருத்துகளை இணைக்கிறது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தத்துவ கலைக்களஞ்சியத்தில் கொடுக்கப்பட்ட விளக்கப்படி, வாபி என்பது “அடக்கப்பட்ட, கடுமையான அழகு” என்றும், ஷாபி என்பது “பழமையான துருவேறிய அழகு” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த தத்துவம் நிலையற்ற தன்மை, துன்பம், வெறுமை என்ற மூன்று முக்கிய புத்த போதனைகளின் அடிப்படையில் அமைகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு