You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை ரத்து - உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்ன?
குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
தண்டனையில் விலக்கு அளிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர்.
ற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் குஜராத் அரசு உண்மைகளை புறக்கணித்துள்ளது என்று நீதிபதிகள் கூறினர். குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 வது பிரிவின் படி, வழக்கு விசாரணை செய்யப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்திற்கேமன்னிப்பு வழங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த இடத்திலோ, குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் இடத்திலோ இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.” என்று கூறியுள்ளது.
நீதிபதி நாகரத்னா தீர்ப்பில், “இந்த விதியில் வழக்கு எந்த மாநிலத்திற்கு மாற்றப்பட்டது என்பதையும் உள்ளடக்கியது. இந்த அடிப்படையில் மட்டுமே, நிவாரண உத்தரவு ஒதுக்கி வைக்கப்படும். இந்த விஷயத்தில் குஜராத் அரசின் இந்த முடிவை எடுப்பதற்கான திறன் மிகவும் முக்கியமானது.
ஆனால், முழுப் பிரச்சினையும் இங்கு முடிவதில்லை. 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் குறிக்கும் வகையில் பொது மன்னிப்பு மனுவை குஜராத் அரசு பரிசீலிக்க வேண்டும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்த மனுவில் பல முக்கிய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. பம்பாய் உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு, தலைமை நீதிபதியின் கருத்து, குற்றவாளி ராதேஷ்யாம் ஷாவின் ரிட் மனுவில் சேர்க்கப்படவில்லை. மேலும் விண்ணப்பத்தில் தவறான தகவல்களும் கூறப்பட்டுள்ளன. எனவே இந்த முடிவு செல்லாது” என்றார்.
இந்த பொதுமன்னிப்பு முடிவு சட்டப்பூர்வமானதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த நீதிபதி நாகரத்னா, “இந்த விவகாரத்தில் குஜராத் அரசு தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. ஆகவே பொதுமன்னிப்பு முடிவு ரத்து செய்யப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)