மகாராஷ்டிரா தேர்தல்: வெறும் 150 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் யார்?

மகாராஷ்டிரா தேர்தல்: வெறும் 150 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் யார்?

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள 288 இடங்களில் 230 இடங்களை மகாயுதி கூட்டணி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ், என்.சி.பி (சரத் பவார் பிரிவு) மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) ஆகியவற்றை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு ஆச்சர்யமளிக்கும் விஷயமாகவும் சிலருக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவும் இருந்தது.

அந்த வகையில் மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் வெறும் 155 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவர்தான் அஜாஸ் கான். இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்திருந்தாலும், அவர் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.

அவரைப் பற்றிய முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)