You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முன்பு யாசகம்; இப்போது இசைக்கலைஞர்கள் - இவர்களின் வாழ்க்கை மாறியது எப்படி?
ஸ்காட்லாந்து பேக்பைப் இசைக்கலைஞர்கள் போன்று சீருடை அணிந்துள்ள இவர்கள், உணர்வுபூர்வமான இசையை வாசிக்கின்றனர். நன்கு தேர்ந்த கலைஞர்கள் போன்று வாசிக்கும் இவர்கள், முன்பு யாசகம் எடுத்தவர்கள். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பிரபலமான கப்பர் மலையில் இவர்கள் யாசகம் எடுத்தனர். அரசு-சாரா நிறுவனம் ஒன்று இசைப்பயிற்சி அளித்ததையடுத்து, இந்த மாணவர்களின் வாழ்க்கை மாறியது.
ஸ்ரீ சக்தி சேவா கேந்திரா இவர்களுக்கு இசைப்பயிற்சி மட்டும் அல்லாமல், அவர்களின் கல்விக்கான தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது. இவர்கள் மீண்டும் யாசகம் எடுக்க செல்லாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. பேக்பைப்பர் இசைக்குழு மூலம், இந்த குழந்தைகள் பொருளாதார ரீதியிலான தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இந்த குழந்தைகள் பேக்பைப்பர் குழு மூலம் தங்களுக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு