You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்: வீடுகளை இழந்த மக்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் குறிவைக்கப்படுகிறார்களா?
குஜராத்தின் பெட் துவாரகா எனும் தீவில் உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் மக்கள் பலர் தங்களது வீடுகளை இழந்தனர். 525 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9 மத வழிபாட்டுத் தலங்களும் 3 வணிக வளாகங்களும் அடக்கம்.
அதிகாரிகள் இது குறித்து கூறும் போது, சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த நடவடிக்கையின் மூலம், ஆக்கிரமிக்கப்பட்ட 1,27, 968 சதுர மீட்டர் அரசு நிலம் மீட்கப்பட்டதாகவும் அவற்றின் மதிப்பு ரூ.73.55 கோடி என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
வீடுகளை இழந்தவர்கள் வெட்டவெளியில் குளிர்காலத்தை கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.
வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட தீவான பெட் துவாரகா, குஜராத்தின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு இந்த பகுதியை அடைய படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. குஜராத் தலைநகரான காந்தி நகரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தீவு. மிக சமீபத்தில் குஜராத்தின் இதர பிராந்தியங்களோடு தீவை இணைக்க, சுதர்சன் சேது என்ற பாலம் கட்டப்பட்டது.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)