You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லட்சத்தீவு மாலத்தீவுக்கு மாற்றாக இருக்குமா? ஓர் அலசல்
இந்த மாதத்தின் தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவின் லட்சத்தீவுக்கு பயணம் செய்தபோது, அண்டை நாடான மாலத்தீவை சேர்ந்த சில பிரமுகர்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளால், இருநாட்டு உறவில் விரிசல் உண்டாகி எதிர்பாராத சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்விற்குப் பிறகு லட்சத்தீவுகள் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்தச் சிறிய தீவுக்கூட்டத்தை நோக்கி பெருமளவு சுற்றுலாப் பயணிகளின் பார்வை திடீரென திரும்பியது, சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் பல உள்ளூர்வாசிகளை கவலையடையச் செய்தது.
மாலத்தீவிற்கு வடக்கே, அரபிக்கடலில் அமைந்துள்ளது லட்சத்தீவு. இந்திய கூட்டாட்சி நிர்வாகத்தின் ஒரு பகுதியான லட்சத்தீவுக்கு பயணம் செய்தபோது, பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார் மோதி. அதன் கடற்கரைகளில் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார், புகைப்படங்களை சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தார்.
அதைத் தொடர்ந்து மாலத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் அவரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனர், இந்திய சமூக ஊடகங்களில் இது பெரும் எதிர்ப்பலையைத் தூண்டியது மற்றும் "மாலத்தீவுக்கு மாற்று லட்சத்தீவு" என்று பலரால் பேசப்பட்டது.
இதனால் செய்திகளில் அதிகம் இடம்பெறாத லட்சத்தீவுகள் குறித்த கூகுள் தேடல்கள் கடந்த வாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு விண்ணைத் தொட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் பயண நிறுவனமான மேக்மைட்ரிப் (MakeMyTrip), மோதியின் பயணத்திற்குப் பிறகு அதன் தளத்தில் லட்சத்தீவுக்கான தேடல்கள் 3,400% அதிகரித்துள்ளதாகக் கூறியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)