ஸ்மிருதி மந்தனா: 16 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகம், பெண்கள் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் - யார் இவர்?

ஸ்மிருதி மந்தனா: 16 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகம், பெண்கள் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் - யார் இவர்?

ஸ்மிருதி மந்தனா பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

2024-ல் 1,659 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதுவே ஒரு காலண்டர் ஆண்டில் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சம்.

இதில் நான்கு ஒருநாள் போட்டி சதங்கள் அடக்கம்.

2024 மகளிர் பிரீமியர் லீக்கை வென்ற அணியின் (ஆர்சிபி) கேப்டனாக இருந்தார்.

2023 ஆசிய போட்டியில் இந்தியா தங்கம் வென்றபோது ஸ்மிருதி துணை கேப்டன்.

2022, 2018-ல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருது வென்றார்.

ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரிக்கு பிறகு இந்த விருதை இருமுறை வென்ற 2ஆவது வீராங்கனை இவர்.

2022 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணியில் ஸ்மிருதி இருந்தார்.

2020 டி20 உலகக் கோப்பை, 2017 ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணியிலும் இருந்தார்.

தனது 6 வயதில் அண்ணணை பார்த்து கிரிக்கெட்டைத் தொடங்கினார்.

2013-ல் 16 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது பெற்றுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)