புகைப்படம் எடுத்தவரை விரட்டிச் சென்று மிதித்த யானை

புகைப்படம் எடுத்தவரை விரட்டிச் சென்று மிதித்த யானை

கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து சாலை அருகே வந்துள்ளது. யானையை புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணியை அது தாக்கியது.

அவர் தற்போது மைசூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோன்ற செயல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என வனத்துறை எச்சரித்துள்ளது. யானைகளைத் தொந்தரவு செய்வது ஆபத்தானது என்றும் எச்சரிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு