You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை மேடை ஏறி நிறுத்தச் சொன்ன போலீஸ் அதிகாரி - என்ன நடந்தது?
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் புனே இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி புனேவின் ராஜ்பகதூர் மில்ஸ் எனும் இடத்தில் 'AR Rahman Concert for Feeding Smiles' இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இரவு 10.05 மணியளவில் ‘Dil Se..’ படத்தில் இடம்பெற்ற ‘Chaiyya Chaiyya’ பாடலை மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோது, மேடையில் ஏறிய காவல்துறை அதிகாரி, தனது கடிகாரத்தில் 10 மணியைக் கடந்து விட்டதைக் சுட்டிக்காட்டி உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறினார். அதனையடுத்து, பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் ஏ.ஆர். ரஹ்மான்.
சர்வதேச அரங்கில் பெரும்புகழ்பெற்ற, ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவத்தால், காவல்துறை அவரை அவமரியாதை செய்துவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்