'இந்தியா மீது அதிக வரி' - அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

'இந்தியா மீது அதிக வரி' - அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்

இந்தியாவிற்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் இதனை உறுதிபடுத்தியுள்ளார். மீண்டும் ஒருமுறை இந்தியா பாகிஸ்தான் போரை தான் தான் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் கேள்விகளுக்கு டிரம்ப் அளித்த பதில்கள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா 20 - 25% வரையிலான வரி விதிப்பை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தியாவுக்கு எவ்வளவு வரி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

அவர்கள் 25% வரி செலுத்தப் போகிறார்கள்.ப்ஆம், இந்தியா கூடுதல் வரி செலுத்த தயாராகி வருகிறது. ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். இந்தியா நட்பு நாடு. அவர்கள் பாகிஸ்தான் உடனான மோதலை என் வேண்டுகோளால் முடித்துக் கொண்டார்கள்.

பாகிஸ்தானும் அதை செய்தது. நாங்கள் நிறைய சிறந்த தீர்வுகளை அளித்துள்ளோம். சமீபத்திய ஒப்பந்தம் கம்போடியாவுடன்... அது சிறந்த ஒன்று.

அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது, இல்லையா?

எனக்குத் தெரியாது, நான் உங்களிடம் கேட்கிறேன்.

நான் அதில் சிறந்த வேலை செய்தேனா? சுமார் 5 வெவ்வேறு போர்களில் நான் சிறப்பாக செயல்பட்டேன். எனக்கு இதில் பாராட்டு கிடைக்கும் என நினைக்கிறீர்களா? இல்லை.

இந்தியாவுடனான ஒப்பந்தம் இறுதியாகிவிட்டதா?

இல்லை

எவ்வளவு வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பார்க்கலாம். இந்தியா ஒரு நல்ல நண்பன், ஆனால் இந்தியா மற்ற நாடுகளை விட அதிக வரிகளை வசூலித்துள்ளது. பல ஆண்டுகளாக. நான் தற்போது பொறுப்பில் இருக்கிறேன். நாம் அதை செய்ய முடியாது. வர்த்தக ஒப்பந்தங்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். அமெரிக்காவுக்கு அவை மிக மிக நன்றாக இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு