உறைந்த ஏரியில் சிக்கிய மான்களை காப்பாற்றிய மீனவர் - காணொளி

உறைந்த ஏரியில் சிக்கிய மான்களை காப்பாற்றிய மீனவர் - காணொளி

ரஷ்யாவின் சைபீரியாவில் மிதமான வானிலை காரணமாக, மான்கள் கடக்க முடியாத அளவுக்கு பனிக்கட்டி வழுக்கும். தப்பிக்க முயலும்போது, அவை அடிக்கடி உறைந்து இறக்கும் அபாயமும் அல்லது தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் ஆபத்தும் உள்ளது. அவ்வாறு உறைந்த ஏரியில் மாட்டிக்கொண்ட பல மான்களை ஒரு மீனவர் காப்பாற்றினார்.

“நாங்கள் இதற்கு முன்பு இங்கு வந்தபோது, ஐந்து மான்களை தோள்களில் சுமந்து சென்றோம். அவை கனமானவை” என்கிறார் இலியா ஜைட்சேவ் எனும் அந்த மீனவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு