சமூகத் தடைகளை தாண்டி ஆழ்கடல் மீன்பிடித்தலில் அசத்தும் பெண் - காணொளி

சமூகத் தடைகளை தாண்டி ஆழ்கடல் மீன்பிடித்தலில் அசத்தும் பெண் - காணொளி

கென்யாவின் கிலிஃபி சமூகத்தை சேர்ந்த பௌலின் ம்வாகா மீன்பிடித்தலில் அச்சமூகத்தில் நிலவும் தடையை தாண்டி ஆழ்கடலில் மீன்பிடித்து வருகிறார். வலையை வேகமாக நகர்த்துவதன் மூலம், பௌலின் ம்வாகா கலாசார விதிமுறைகளை கட்டுடைக்கிறார். பெண்கள் மீன்பிடிப்பதை அவருடைய சமூகம் தடை செய்கிறது. ஆனால், அவர் அந்த தடையை தாண்டி மீன்பிடிக்கிறார்.

வேறு எந்த வேலையும் கிடைக்காத சூழலில் அவர் மீன்பிடி தொழிலில் இறங்கினார். ஆழ்கடலுக்கு செல்லும் போதெல்லாம் அவருடைய குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர்.

மன உறுதி குறையாத பௌலின், இன்னும் இரண்டு பெண்கள் கடலுக்கு செல்ல ஊக்கப்படுத்தியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)