குஜராத் வதோதரா படகு விபத்து: 12 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பலி – காணொளி

குஜராத் வதோதரா படகு விபத்து: 12 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் பலி – காணொளி

குஜராத் மாநிலம் வதோதரா ஹரனி ஏரியில் படகு சவாரி சென்ற 12 பள்ளி மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சாயாஜி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும் வதோதரா நகர காவல் ஆணையர் அனுபம் சிங் கெஹ்லாட் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுற்றுலாவுக்கு வந்த, தனியார் பள்ளியைச் சேர்ந்த 27 பேர் ஹரனி ஏரியில் படகு சவாரி செய்துள்ளனர். இதில் 23 பேர் பள்ளி மாணவர்கள், நான்கு பேர் ஆசிரியர்கள் ஆவர். படகில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிகமான பேர் சவாரி செய்துள்ளனர்.

இதனால் நிலை தடுமாறிய படகு கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. உயிர் பாதுகாப்புக்காக அணிந்துகொள்ள வேண்டிய “லைஃப் ஜாக்கெட்” முறையாக அணிந்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)