காணொளி: காணாமல் போன மூதாட்டி - கண்டுபிடிக்க உதவிய நாய்

காணொளி: காணாமல் போன மூதாட்டி - கண்டுபிடிக்க உதவிய நாய்

ஈயோர் என்ற நாய், தனது உரிமையாளரின் 86 வயது தாய் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது தவறி விழுந்து உதவிக்காக தவித்தபோது, காவல்துறை அதிகாரியை அவரிடம் அழைத்துச் சென்று, அந்த மூதாட்டியை மீட்க உதவியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒகலூசா கவுன்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட காட்சிகளில், சாலையில் ஈயோரைப் பார்த்ததும், ஒரு காவல்துறை அதிகாரி தனது வாகனத்திலிருந்து இறங்குகிறார்.

பின்னர் ஈயோர், அந்த அதிகாரியை நடைபாதையில் விழுந்து கிடக்கும் மூதாட்டியிடம் அழைத்துச் செல்கிறது. பிறகுஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு