டபுல்யூ டபுல்யூ இ நட்சத்திரங்களை கவர்ந்த சேற்றில் நடக்கும் மல்யுத்தம்

டபுல்யூ டபுல்யூ இ நட்சத்திரங்களை கவர்ந்த சேற்றில் நடக்கும் மல்யுத்தம்

உகாண்டாவில் Soft Ground Wrestling எனும் மல்யுத்த போட்டி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த இளம் மல்யுத்த வீரர்களுக்கு மில்லியன் கணக்கான பார்வைகளை கிடைத்துள்ளது.

இந்த வீரர்கள் கடினமான பயிற்சி பெற்று கடினமான வாழும் சூழல்களில் இருக்கிறார்கள். 78 ஆண்களும் 29 பெண்களும் இதில் சண்டையிடுகிறார்கள். இவர்களுக்கு சம்பளம் கிடையாது. நன்கொடைகளையே நம்பி இருக்கிறார்கள்.

அமெரிக்க மல்யுத்த வீரர் கோடி ரோட்ஸ் மல்யுத்த மேடையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு