You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காணாமல் போகும் ஊழியர்கள்' - பாகிஸ்தான் ஏர்லைன்ஸில் என்ன நடக்கிறது?
பி.ஐ.ஏ எனப்படும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சின் ஊழியர்கள் கனடாவில் "காணாமல் போவதாக" தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை, கனடாவின் டொராண்டோவில் இருந்து லாகூருக்குச் சென்ற பிகே 798 விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த ஆசிப் நஜாம், சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வரவில்லை என்பதை பி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் உறுதிப்படுத்தினார்.
அவரைத் தொடர்பு கொண்டபோது, தனக்கு 'உடல்நலக்குறைவு' ஏற்பட்டதால் வர முடியவில்லை என்று அவர் கூறியதாக பி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பணிக்கு வராதது தொடர்பாக அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. சில நேரங்களில் பைலட்டுகளின் கல்வித் தகுதி பற்றியும், சில நேரங்களில் நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பற்றியும் விமர்சனங்கள் எழுகின்றன.
என்ன நடக்கிறது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு