காஷ்மீர்: ஆண்டில் 6 மாதம் மட்டுமே இயங்கும் 'பருவகால' பள்ளிகள்

காஷ்மீர்: ஆண்டில் 6 மாதம் மட்டுமே இயங்கும் 'பருவகால' பள்ளிகள்

காஷ்மீரில் இயங்கும் இந்த 'பருவகால பள்ளிகள்' ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கு மட்டுமே இருக்கும். ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே இந்த பள்ளி இருக்கும். இங்குள்ள நாடோடிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்வார்கள். அவர்களுக்கான பள்ளி இது.

இந்த பள்ளியின் ஆசிரியர் ஹிலால் அஹமது தார் கூறுகையில், "மழையோ, வெயிலோ எப்படி இருந்தாலும் குழந்தைகளுக்கு பாடம் எடுக்க இங்கு வரவேண்டும். இந்த ஆபத்தான பாதையை நாங்கள் தினமும் கடக்க வேண்டும். என் வீட்டிலிருந்து இந்த இடத்திற்கு 7 கிலோமீட்டர் தொலைவு.

நாங்கள் 6 மாத ஒப்பந்தத்தில் பணிபுரிவோம், அதற்கான சம்பளம் எங்களுக்குக் கிடைக்கும்.

அரசு இந்த பள்ளிக்காக கூடாரம் அமைத்துள்ளது. ஆனால் மழை பெய்தால் கூடாரத்தின் உள்ளே தண்ணீர் வந்துவிடும். அன்றைய நாள் வகுப்புகள் எடுக்க முடியாது. இங்குள்ள மக்கள் ஏழைகள். இந்த குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், சீருடை ஆகியவை வேண்டும். எனவே, இந்த குழந்தைகளுக்கு அரசு உதவுகிறது, பென்சில், நோட்டுகள் ஆகியவற்றை வழங்குகிறது. இதனால், குழந்தைகள் ஊக்கம் பெற்று பள்ளிக்கு வருகின்றனர்.

இங்குள்ள நாடோடிகளின் கடைசி குடியிருப்புக்கு நடந்து செல்ல ஒருநாளாகிவிடும். குழந்தைகளால் அவ்வளவு தூரம் நடந்து மலையின் கீழே உள்ள பள்ளிக்கு செல்ல முடியாது. அதனால் அரசு இந்த பருவகால பள்ளிகளை திறந்துள்ளது. சில சமயங்களில் ஆசிரியர்கள் இரவில் அந்த கூடாரங்களிலேயே தங்க வேண்டியிருக்கும்.

நாங்கள் வளர்ந்து இந்த உலகை விட்டு நீங்கினாலும், இந்த குழந்தைகள் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள். சிலர் மருத்துவராக, பொறியாளராக சாதிப்பார்கள். அந்த சமயத்தில், அவர்கள் எங்களை நினைவில் வைத்திருப்பார்கள்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு